மது போதையில் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த பாடகர் வேல்முருகன்!
ADDED : 589 days ago
நாட்டுப்புறப் பாடகரான வேல்முருகன் பல படங்களில் பாடியிருக்கிறார். இவர் நேற்று முன்தினம் மாலை திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார்கள். இதனால் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளார் வேல் முருகன்.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் வேல்முருகனின் விமான பயணத்தை ரத்து செய்திருக்கிறார்கள். இதன் பிறகு தனது செயல்பாட்டுக்கு வேல்முருகன் மன்னிப்பு கேட்டுக் கொண்டதை அடுத்து அவரை வேறு விமானத்தில் திருச்சிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.