உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவுக்கு பதிலாக விஷ்ணு விஷால்

சிம்புவுக்கு பதிலாக விஷ்ணு விஷால்

நடிகர் சிலம்பரசன் நடித்து வெளிவந்த 'மாநாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்கிற படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் ஒரு சில காரணங்களால் சிம்பு இப்படத்தை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இப்படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது 'கொரோனா குமார்' படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கின்றார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். மேலும், இப்படம் அல்லாமல் கோகுல் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !