ஒரே நேரத்தில் இரண்டு ஓடிடி தளங்களில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி!
ADDED : 573 days ago
சந்தானம் முழுநேர ஹீரோவாக நடிக்க தொடங்கிய பிறகு தில்லுக்கு துட்டு படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு நடித்த படங்கள் தோல்வியை சந்தித்து வந்த போதும், டிடி ரிட்டர்ன்ஸ் ஓரளவு வெற்றி பெற்றது. அதன் பிறகு சந்தானம் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த வடக்குப்பட்டி ராமசாமி என்ற படமும் வெற்றி பெற்றது. இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த வடக்குப்பட்டி ராமசாமி படம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. அதிலும் ஒரே நேரத்தில் அமேசான் மற்றும் ஆஹா என்ற இரண்டு ஓடிடியில் இந்த படம் வெளியாகி உள்ளது.