மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தில் இணைந்த அனுபமா பரமேஸ்வரன்
ADDED : 623 days ago
‛கர்ணன், மாமன்னன்' படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்கப் போகிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ‛போர் தொழில்' படத்தை தயாரித்த அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. துருவ் விக்ரமுக்கு ஜோடியாக 'பிரேமம்', 'குரூப்' ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். படத்தின் தலைப்பு அறிவிக்கப்படவில்லை.