தனுஷ் உடன் இணையும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!
ADDED : 584 days ago
ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'அமரன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.
ஆனாலும், தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தனுஷை சந்தித்து கதை ஒன்றைக் கூறியுள்ளார். இதனை கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமரன் படம் வெளியான பிறகு இதற்கான பணிகள் தொடங்கும் என்கிறார்கள்.