அனுஷ்கா நடிக்கும் புதிய படம் அறிவிப்பு
ADDED : 614 days ago
வம்சி மற்றும் ராஜீவ் ரெட்டி இணைந்து யு.வி.கிரியேஷன்ஸ் மற்றும் பர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்கள் சார்பாக தயாரிக்கும் படம் 'காட்டி'. அனுஷ்கா கதையின் நாயகியாக நடிக்கிறார். சிந்தாகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ், கிரிஷ் ஜாகர்லமுடி மற்றும் புர்ரா சாய் மாதவ் ஆகியோர் எழுதிய கதையை கிரிஷ் இயக்குகிறார்.
பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. ஒரு அப்பாவி குற்றவாளியாக மாறி லெஜண்ட் அவதாரம் எடுப்பதே படத்தின் கதை. படத்தின் பிரீ-லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளது. போஸ்டரில் புடவை அணிந்தபடி தனது முகத்தை மூடியபடி கம்பீரமாக நடப்பது போல காட்சியளிக்கிறார் அனுஷ்கா. படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகிறது.