உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமரன் படத்தில் இணைந்த பிரேமலு பட நடிகர்

அமரன் படத்தில் இணைந்த பிரேமலு பட நடிகர்

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்திய ராணுவ வீரர் முகுந்தன் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஷ்யாம் மோகன் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'பிரேமலு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !