புது சீரியலில் பிக்பாஸ் வினுஷா
                                ADDED :  586 days ago     
                            
                            விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த வினுஷா தேவி அதன் இரண்டாவது சீசனிலும் நடித்தார். பாரதி கண்ணம்மா சீசன் 2க்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் அந்த தொடர் விரைவிலேயே முடித்து வைக்கப்பட்டது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமான வினுஷா, தற்போது விஜய் டிவியில் புதிதாக தயாராகி வரும் தொடரில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். பனிவிழும் மலர்வனம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். இந்த தொடரின் ஷூட்டிங்கானது தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வினுஷாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.