சீரியலில் கம்பேக் கொடுக்கும் சரண்யா துராடி
ADDED : 565 days ago
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன்பின் நடிகையாக மிளிர்ந்தவர் சரண்யா துராடி. வெள்ளித்திரையில் இவர் நடித்த படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து, ரன், வைதேகி காத்திருந்தாள் ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார். ஆனால், அந்த சீரியல்கள் எதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை. அதன்பின் சில மாதங்களாக வாய்ப்புகள் இன்றி தவித்த சரண்யா தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சரண்யாவின் இந்த கம்பேக் அவருக்கு இனியாவது கைகொடுக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.