சீரியல் ஜோடி திருமணம்
ADDED : 570 days ago
சின்னத்திரை தொடர்களில் வருடக் கணக்கில் இணைந்து நடிப்பவர்கள் நிஜத்திலும் இணைவது அடிக்கடி நடக்கும் ஒன்று. அந்த வரிசையில் 'சுந்தரி' தொடரில் நடித்து வந்த அரவிஷ் மற்றும் ஹரிகா. இருவரும் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள்.
இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று இவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
கேரள முறைப்படி நடைபெற்ற இவர்களின் திருமண படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த திருமணத்தில் சின்னத்திரை நட்சத்திரங்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.