மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்'
ADDED : 558 days ago
கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் 'அஞ்சான்'. லிங்குசாமி இயக்கியிருந்தார் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் அவரே தயாரித்திருந்தார். இந்த படத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
இந்த நிலையில் படத்தை மறு வெளியீடு செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது. படத்தில் முன்பு செய்த தவறுகளை சரி செய்து இயக்குனர் லிங்குசாமி புதிய திரைக்கதைக்கு ஏற்றவாறு காட்சிகளை மாற்றி அமைத்து மீண்டும் எடிட் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பணிகள் முடிந்ததும், நண்பர்களிடம் அதை போட்டு காண்பித்து அவர்களுக்கு திருப்தி ஏற்படும் பட்சத்தில் படத்தை வெளியிடுவார் என்று தெரிகிறது.