சோனியா அகர்வாலின் ‛7ஜி' படத்தின் டீசர் வெளியானது
ADDED : 561 days ago
சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் இருவரும் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 7ஜி. ஹாரூன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், சோனியா அகர்வால் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோரின் வாழ்க்கையில் ஒரு பேய் நுழைகிறது. அப்படி நுழைந்து அது என்னென்ன தொல்லைகளை கொடுக்கிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகியுள்ளது. ஹாரர் கலந்த திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.