தொகுப்பாளர் ஆகிறார் ஆரி
ADDED : 549 days ago
'ரெட்டைச்சுழி' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆரி அர்ஜூனா. அதன்பிறகு மாலை பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, தரணி, மாயா, நெஞ்சுக்கு நீதி உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அலேகா, பகவான், டிஎன் 43 படங்களில் நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குறிப்பாக பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்று டைட்டிலும் வென்றார். தற்போது அவர் சின்னத்திரை தொகுப்பாளராகி இருக்கிறார்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வா தமிழா வா' என்ற நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகியதை தொடர்ந்து ஆரி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.