பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா கேஷுவல் கிளிக்ஸ்!
ADDED : 553 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் லாவண்யா. அடிப்படையில் மாடலான இவர் பல அழகி போட்டி மேடைகளில் ராம்ப் வாக் செய்துள்ளார். தற்போது சீரியல் எதிலும் கமிட்டாகாமல் இருக்கும் லாவண்யா மேக்கப் எதுவும் இல்லாமல் தனது கேஷுவலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேக்கப் இல்லாமலேயே லாவண்யா இவ்வளவு அழகா? என ரசிகர்களும் லாவண்யாவின் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.