மூன்றே நாளில் 80 கோடி கடந்த 'இருமுடி'
ADDED : 3 minutes ago
சிவா நிர்வானா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'இருமுடி'. தமிழில் 'இருமுடி கட்டு' என்ற பெயரிலும் டப்பிங் ஆகி இப்படம் வெளியானது.
தொடர்ந்து சில பல தோல்விகளை சந்தித்து வந்த ரவி தேஜாவுக்கு இந்தப் படம் சாதனை வெற்றி, வசூலைக் கொடுத்துள்ளது. மூன்றே நாட்களில் இப்படம் 80 கோடி வசூலைப் பெற்றுள்ளது. வேறு எந்த ஒரு பிராந்திய திரைப்படமும் இப்படி ஒரு வசூலைப் பெற்றதில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
பண்டிகை நாட்களில் வெளியாகாமல், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தாமல் சாதாரண டிக்கெட் கட்டணத்திலேயே இந்த வசூல் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
விரைவில் இப்படம் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.