‛தி டார்க் ஹெவன்' படம் செப்., 18ல் ரிலீஸ்
ADDED : 45 minutes ago
டி3 படத்தை இயக்கிய பாலாஜி இயக்கி உள்ள படம் ‛தி டார்க் ஹெவன்'. இதில் சித்து முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் பிக்பாஸில் வந்த தர்ஷிகா, ரித்விகா ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர்.
முழு நீள சஸ்பென்ஸ், கிரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படம் திரில்லராக இருந்தாலும் ஒரு வெட்டு இல்லாமல் சென்சாரில் சான்றிதழ் வாங்கி உள்ளனர். ஒரு கொலை அதன் பின்னணியில் நடக்கும் துப்பறிவை வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,தென்காசி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த படம் கடந்த ஜூலை 16ம் தேதியே வெளியாக வேண்டியது. அப்போது நிறைய படங்கள் வந்ததால் ரிலீஸை தள்ளி வைத்தனர். இப்போது செப்டம்பர் 18ல் படம் ரிலீஸ் ஆகிறது என அறிவித்துள்ளனர்.