பிரபல தெலுங்கு நிறுவனத்தோடு இணையும் பிரதீப் ரங்கநாதன்!
ADDED : 593 days ago
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் 'லவ் டுடே' படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரை தேடி கதாநாயகனாக நடிக்க பல வாய்ப்புகள் குவிகிறது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.சி' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இதையடுத்து பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழிலும் படங்களை தயாரிக்க முன்வந்துள்ளனர். இப்போது அஜித்தை வைத்து 'குட் பேட் அக்லி' என்கிற படத்தை தயாரிக்கின்றனர். இதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை தயாரிக்கவுள்ளனர் மைத்ரி மூவி மேக்கர்ஸ். இதற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு ரூ.10 கோடி சம்பள தொகையாக பேசப்பட்டதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.