மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
520 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
520 days ago
சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை லட்சுமி மேனன். பின்னர் ‛கும்கி' படத்தின் மூலம் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு, ஜிகர்தண்டா, மிருதன், வேதாளம் போன்ற படங்களில் நடித்தார். 2016ம் ஆண்டு கடைசியாக ‛றெக்க' படத்தில் நடித்திருந்த லட்சுமி மேனன் அதன்பின் தமிழில் படங்கள் நடிக்காமல் இருந்தார்.
கிட்டதட்ட 6 வருடங்களுக்கு பின் மீண்டும் சினிமா பக்கம் வந்த லட்சுமி மேனன் புலிக்குத்தி பாண்டி, சந்திரமுகி-2 ஆகிய படங்களில் நடித்தார். தற்போது மலை, சப்தம் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நடிகர் யோகி பாபு ஹீரோவாகி நடித்து வரும் மலை படத்தில் அவருக்கு மனைவியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
520 days ago
520 days ago