விஜய் சேதுபதியின் மகாராஜா எப்போது ரிலீஸ்?
ADDED : 555 days ago
அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் நடித்த ஜவான் படத்தை அடுத்து தனது ஐம்பதாவது படமான மகாராஜாவில் நடிக்க தொடங்கினார் விஜய் சேதுபதி. விதார்த் நடித்த குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கிய நித்திலன் இப்படத்தை இயக்குகிறார். விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்நிலையில் வருகிற மே மாதம் 16-ம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.