பிரபுவுக்கு ஜோடியாக நடித்தும் பயனில்லை - சீரியல் நடிகை அனிலா ஸ்ரீ வருத்தம்
ADDED : 550 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க அசை தொடரில் விஜயா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அனிலா ஸ்ரீ. முன்னதாக சின்னத்தம்பி, பாவம் கணேசன் ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். இருப்பினும் சிறகடிக்க ஆசை தொடர் தான் அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் தந்துள்ளது.
இதுகுறித்து அண்மையில் பேட்டியில் பேசியுள்ள அவர், '30 வருடங்களுக்கு மேலாக மலையாளம் மற்றும் தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறேன். ஆனால், சிறகடிக்க ஆசை தொடர்தான் எனக்கு அதிக பிரபலத்தை தந்துள்ளது. நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், துரதிர்ஷ்ட வசமாக அந்த படம் ரிலீஸாகமல் போய்விட்டது. அந்த திரைப்படம் வெளியாகி இருந்தால் எனக்கு இன்னும் பெரிய அளவில் பெயர் கிடைத்திருக்கும்' என்று கூறியுள்ளார்.