பான் இந்தியா படமாகும் 'நாகபந்தம்'
ADDED : 542 days ago
ஆன்மிகம், புராணம் கலந்த சமூக படங்களுக்கு தற்போது அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால் அப்படியான படங்கள் அதிகமாக உருவாகிறது. அந்த வரிசையில் வருகிறது 'நாகபந்தம்'. இந்த படத்தை அபிஷேக் பிக்சர்ஸ், தண்டர் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிக்கிறது.
'டெவில்' படத்தை இயக்கிய அபிஷேக் நாமா இந்த படத்தை இயக்குகிறார். கேஜிஎப் புகழ் அவினாஷ் கதை நாயகனாக நடிக்கிறார். சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார், அபே இசை அமைக்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ளார்.
தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் பான் இந்தியா படமாக தயாராகிறது. அடுத்த ஆண்டு வெளிவருகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.