உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛அனிமல்'-ஐ பார்ப்பவர்கள் ‛சித்தா'-வை பார்க்க முடியவில்லையா : சித்தார்த்

‛அனிமல்'-ஐ பார்ப்பவர்கள் ‛சித்தா'-வை பார்க்க முடியவில்லையா : சித்தார்த்

கடந்தாண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான ‛சித்தா' படம் வரவேற்பை பெற்றது. தற்போது கமல் உடன் ‛இந்தியன் 2' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் விருது விழா ஒன்றில் இவர் பங்கேற்றார். அதில் அவருக்கு இந்த படத்திற்காக விருது வழங்கப்பட்டது. விழாவில் பேசிய சித்தார்த், ‛‛சித்தா படத்தை எங்களால் பார்க்க முடியவில்லை என எந்த பெண்ணும் கூறவில்லை. ஆனால் சில ஆண்கள் கூறியதாக என்னிடமும், இயக்குனர் அருண்குமாரிடமும் கூறினார்கள். மிருகம் என தலைப்பு வைத்த படத்தை பார்க்கிறார்கள். ஆனால் என் படத்தை பார்க்கும்போது அவர்களுக்கு தொந்தரவாக இருந்ததாம். இதற்கு பெயர் தொந்தரவு இல்லை. வெட்கமும், குற்றவுணர்வும்... பரவாயில்லை போகப் போக சரியாகிவிடும்'' என்றார்.

சித்தார்த் குறிப்பிட்ட அந்த படம் ஹிந்தியில் அர்ஜூன் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடிப்பில் வெளியான அனிமல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் ரத்தம் தெறிக்கும் காட்சிகளும், பெண்களை கீழ்த்தரமாக நடத்தும் காட்சிகளும் அதிகம் இடம் பெற்றதாக விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !