லாரன்ஸின் 25வது படமாக ஹன்டர்!
ADDED : 726 days ago
சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் கோல்ட்மைன்ஸ் பிலிம்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'ஹன்டர்' என்கிற படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கின்றார். இது ராகவா லாரன்ஸ் 25வது படமாக உருவாகிறது.
இதனை அயோக்யா படத்தை இயக்கிய வெங்கட் மோகன் என்பவர் இயக்குகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் புலி பிரதான கதாபாத்திரத்தில் இடம்பெறும் என்கிறார்கள். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். 2025ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகிறது என அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.