சந்தீப் கிஷன் வைத்து படம் இயக்கும் சாம் ஆண்டன்!
ADDED : 860 days ago
நடிகர் சந்தீப் கிஷன் தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். அங்கு அவருக்கென்று தனி இடம் உள்ளது. தமிழில் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பழக்கமான நடிகராக உள்ளார். தற்போது தனுஷின் 'ராயன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சந்தீப் கிஷன்.
இந்நிலையில் புதிதாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கின்றார். கோரிலா, 100, டார்லிங் உள்ளிட்ட படங்களைக் இயக்கிய சாம் ஆண்டன் இப்படத்தை இயக்குகிறார். இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.