உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர்

விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர்

சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62வது படமான 'வீர தீர சூரன்' வில் நடிக்கவுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் முதலாவதாக இரண்டாம் பாக கதையை ரெடியாகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ்(மலையாள நடிகர்), துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிபு தமின்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.

சமீபத்தில் இதன் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில் மலையாள நடிகர் சித்திக் நடிக்கின்றார் என அறிவித்துள்ளார். இவர் மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !