பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி?
ADDED : 545 days ago
பசங்க, வம்சம், மெரினா, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். கடைசியாக இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதன்பிறகு பாண்டிராஜ் அடுத்த படத்தை குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் பாண்டிராஜின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர் இதில் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.