ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ
ADDED : 536 days ago
பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல டிவி தொடர்களில் நடித்தவர் ரச்சிதா மகாலட்சுமி. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது சினிமாவிலும் பயணித்து வரும் இவர் எக்ஸ்ட்ரீம், பயர் போன்ற படங்களிலும் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று ரச்சிதாவின் 33வது பிறந்த நாளையொட்டி பயர் படத்தின் கவர்ச்சியான முன்னோட்ட வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதோடு தனது தாயாருடன் தான் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டு, ‛என்னுடைய ஒரே உலகம்' என அம்மாவை குறிப்பிட்டுள்ளார் ரட்சிதா.
முன்னோட்ட வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=8_dpkxy4PmQ&feature=youtu.be