வடக்கன் பட டீசர் வெளியானது
ADDED : 530 days ago
வட மாநிலங்களில் இருந்து வேலை வாய்ப்புக்காக பலரும் தமிழகத்துக்கு வருவதால் இங்குள்ளவர்களின் வேலைவாய்ப்பு பறிபோய் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுகளை எழுந்து வருகிறது. இந்த நிலையில் அந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வடக்கன் என்ற பெயரில் ஒரு படம் தயாராகி உள்ளது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடும் இந்த படத்தை பாஸ்கர் சக்தி இயக்கி உள்ளார். குங்குமராஜ், முத்துசாமி, வைரமாலா, ரமேஷ் வைத்யா உட்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜனனி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.