புது தொடரில் கமிட்டான சல்மா அருண்
ADDED : 534 days ago
நடிகை சல்மா அருண், ‛ராஜா ராணி 2' மற்றும் ‛அமுதாவும் அன்னலெட்சுமியும்' ஆகிய தொடர்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது சிறகடிக்க ஆசை தொடரில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து அதிக அளவில் ரீச்சாகியுள்ளார். இதனால் சல்மாவுக்கு பல வாய்ப்புகளும் வருகிறது. இந்நிலையில், தனியார் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் சல்மா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இதை உறுதிபடுத்தியுள்ள சல்மா அருண், அண்மையில் அளித்துள்ள பேட்டியில், சிறகடிக்க ஆசை தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்தாலும் புதிதாக கமிட்டாகியுள்ள தொடரில் பாசிட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.