உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜோவிதாவின் சினிமா கணக்கை துவக்குமா 'டார்க் ஜெயிண்ட்'

ஜோவிதாவின் சினிமா கணக்கை துவக்குமா 'டார்க் ஜெயிண்ட்'


'பூவே உனக்காக' தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஜோவிதா லிவிங்ஸ்டன். இவர் நடிகரும் இயக்குநருமான லிவிங்ஸ்டனின் மகள். அந்தத் தொடருக்குப் பிறகு பல தொடர்களில் நடித்தவர் ஜோவிதா. தற்போது 'டார்க் ஜெயிண்ட்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இது ஒரு ஹாரர் திரில்லர் படம், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால், 'அயலி' மதன், ஆதர்ஷ், மற்றும் லிவிங்ஸ்டன் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இசை விக்னேஷ் ராஜா. ஒளிப்பதிவு சங்கீத் மணிகோபால். இப்படத்தினை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லோகேஸ்வரன், பயோவன் கிரியேஷனிசம் எனும் பேனரில் தயாரிக்கிறார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் கே.எஸ். கிஷன் கூறியது “படத்தின் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளது. இது ஒரு வித்யாசமான ஹாரர் திரில்லர் படமாக உருவாகி வருகிறது” என்றார். இந்த படம் ஜோவிட்டாவின் சினிமா கேரியரை தொடங்கி வைக்குமா என்பது படம் வெளியானதும் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !