பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை
ADDED : 524 days ago
8 தோட்டாக்கள், ஜீவி உள்ளிட்ட பல படங்களில் நடித்த வெற்றி நடிக்கும் புதிய படம் 'பகலறியான்'. அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். முருகனின் இயக்கத்தில், லதா முருகனின் தயாரிப்பில் உருவாகி உள்ளது. விவேக் சரோவின் இசை அமைத்துள்ளார். அபிலாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“வித்தியாசமான த்ரில்லர் படமாக உருவாகும் இது ஒரே இரவில் நடக்கும் கதை என்பதாலும், படத்தில் பல சஸ்பன்ஸ் காட்சிகள் இடம்பெறும் என்பதாலும் பரவலான ரசிகர்களின் கவனத்தை பெறும். படத்தின் முதல் பார்வையை விஜய் சேதுபதி வெளியிட்டார். பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்கிறார் இயக்குனர் முருகன்.