விஜயகாந்த் நினைவிடத்தில் பாலா நெகிழ்ச்சி செயல்!
ADDED : 491 days ago
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா தொகுப்பாளராகவும் நடிகராகவும் கலக்கி வருகிறார். அவருக்கு நார்வேயில் நடைபெற்ற விருது நிகழ்வில் மறைந்த நடிகர் விஜயகாந்த் பெயரிலான விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து விஜயகாந்த் நினைவிடத்தில் அந்த விருதினை வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது சமூக சேவையில் அதிக ஆர்வம் கொண்டவரான பாலாவிடம் ஒரு தாய் தனது மகனின் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை காட்டி சிறுவனது படிப்புக்கு உதவுமாறு கூறினார். அப்போது சற்றும் தாமதிக்காத பாலா தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் கல்விக்கட்டணத்திற்காக கொடுத்துவிட்டு சிறுவனை நன்றாக படிக்குமாறு வாழ்த்தினார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பலரும் பாலாவை வள்ளல்களுடன் ஒப்பிட்டு பாராட்டி வருகின்றனர்.