உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நில மோசடி : நடிகை கவுதமி புகார்

நில மோசடி : நடிகை கவுதமி புகார்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகை கவுதமி. சமூக ஆர்வலரும் கூட. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஸ்வாத்தான் கிராமத்தில் நிலம் வாங்குவதற்காக காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் நடிகை கவுதமி மூன்று கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அழகப்பனோ பிளசிங் அக்ரோ பார்ம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்வாத்தான் கிராமத்தில் உள்ள நிலத்தை 57 லட்ச ரூபாய்க்கு பவர் எழுதி வாங்கியுள்ளார்.

அந்த நிறுவனத்தின் நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாது என்பதால் தன்னிடம் நிலம் வாங்கித் தருவதாக அழகப்பன் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார் என ராமநாதபுரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரிடம் கவுதமி புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணைக்கு ஆஜராகி விபரங்களை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !