நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது
ADDED : 634 days ago
தமிழில் தி டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படங்களில் நடித்து வரும் நயன்தாரா மலையாளத்தில் நிவின் பாலியுடன் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். ஜார்ஜ் பிலிப்ஸ் ராய் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இணைந்து இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா ஒரு பள்ளி ஆசிரியை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், நேற்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படத்தை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டு இருக்கிறார். இதற்கு முன்பு நிவின் பாலியுடன் லவ் ஆக்சன் டிராமா என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.