கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு?
ADDED : 562 days ago
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898 ஏ.டி'. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். வைஜயந்தி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
கடந்த பல மாதங்களாக படப்பிடிப்பு நடந்தது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகின்ற ஜூன் 27ந் தேதி அன்று திரைக்கு வருகிறது. மகாபாரதத்தை தழுவி சயின்ஸ் பிக்ஷன் படமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் படத்தில் விஷ்ணு அவதாரம் தொடர்பான காட்சிகள் வருகின்றன. இந்த கதாபாத்திரத்திற்கு தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு பின்னனி குரல் கொடுத்துள்ளார் என நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.