உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட்
ADDED : 516 days ago
அமெரிக்காவின் நியூயார்க்கில் ‛மெட் காலா' எனப்படும் பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இதில் இந்தியா உட்பட உலகம் முழுக்க உள்ள பல்வேறு திரை கலைஞர்கள் பங்கேற்று அசத்துவர். 2024ம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் பாலிவுட் நடிகை ஆலியா பட் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய கண்கவர் புடவையை அணிந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தார் ஆலியா பட். 1905 மணிநேரத்தில் 163 பேர் சேர்ந்து இந்த புடவையை தயார் செய்துள்ளனர்.
ஆலியா கூறுகையில் ‛‛இந்த சிறப்பான சேலைக்கு பின்னால் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த உலகில் புடவையை தவிர வேறு சிறந்த ஆடை எதுவும் இல்லை'' என்றார்.