அன்னையர் தினத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ
ADDED : 518 days ago
நட்சத்திரத் தம்பதியான இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா, அவரது இரண்டு குழந்தைகளையும் கொஞ்ச விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
“10 என்ற அளவில் அம்மா என்று வந்தால் உனது மதிப்பு 99. இனிய அன்னையர் தின வாழ்த்துகள். இதை நான் திரும்பத் திரும்பச் சொல்வேன். நீதான் எனது சிறந்த உயிர், உலகம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் அதற்கு லைக் செய்துள்ளனர். யார் என்ன சொன்னாலும் அந்தக் குழந்தைகளுக்கு அவர் அம்மா என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்துள்ளனர். பல சினிமா பிரபலங்களும் விக்னேஷ் சிவனின் இந்தப் பதிவுக்கு லைக் செய்துள்ளனர்.