மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
480 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
480 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். பின்னணிப் பாடகி சைந்தவியை படிக்கும் காலத்திலிருந்து காதலித்து 2013ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். 10 ஆண்டுகளாக இவர்களது வாழ்க்கை சுமூகமாக சென்ற நிலையில் இருவரது வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையினால் கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். விரைவில் விவாகரத்து செய்யப் போவதாக கடந்த சில தினங்களாக தகவல் வந்தது. இந்நிலையில் நாங்கள் பிரிகிறோம் என ஜிவி பிரகாசும், சைந்தவியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், பலகட்ட யோசனைகளுக்குப் பிறகு 11 ஆண்டு திருமண வாழ்க்கைப் பிறகு நாங்கள் (ஜிவி பிரகாஷ், சைந்தவி) மனம் ஒத்து பிரிய முடிவெடுத்துள்ளோம். எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் எங்களது மன அமைதிக்காகவும் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம்.
இந்த இக்கட்டான சூழலில் எங்களது தனிப்பட்ட இந்த முடிவை பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். நாங்கள் இருவரும் இதை ஒரு நல்ல முடிவாக இருக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு இருவரும் தெரிவித்துள்ளனர்.
480 days ago
480 days ago