ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ
ADDED : 545 days ago
இளன் இயக்கத்தில் கவின் நடித்து கடந்த வெளியன்று வெளிவந்த திரைப்படம் 'ஸ்டார்'. அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால் உள்ளிட்டோர் நடித்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரித்தனர். சினிமாவில் ஹீரோவாக துடிக்கும் நாயகனின் போராட்டமே படத்தின் கதை.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும், ஸ்டார் படம் வெளிவந்த முதல் வாரத்தில் உலகளவில் ரூ. 15 கோடி வசூலைக் கடந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தாண்டு வெளியாகி உள்ள படங்களில் ஹிட் பட வரிசையில் ஸ்டார் நிச்சயம் இடம் பெறும் என்கிறார்கள்.