உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'விஜய்' வரிசையில் அடுத்த நாயகன் விஜய் கனிஷ்கா

'விஜய்' வரிசையில் அடுத்த நாயகன் விஜய் கனிஷ்கா

தமிழ் சினிமா உலகில் இயக்குனர்கள், நடிகர்கள் என 'விஜய்' பெயர் கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் மற்றுமொரு நடிகராக விஜய் கனிஷ்கா இணைகிறார். இயக்குனர் விக்ரமன் மகனான விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் 'ஹிட் லிஸ்ட்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பல முன்னணி இயக்குனர்கள் அதில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

தமிழ் சினிமாவில் ஏற்கெனவே, விஜய், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, அருண் விஜய், என சில முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களது வரிசையில் விஜய் கனிஷ்காவும் இடம் பெறுவாரா என்பது படம் வெளிவந்த பின்தான் தெரியும்.

நடிகர்களின் வாரிசுகளுக்கு மத்தியில் இயக்குனரின் வாரிசு நடிகராக அறிமுகமாகிறார். தற்போதைய முன்னணி நடிகரான விஜய், ஒரு இயக்குனரின் மகன்தான். இவருக்கடுத்து அப்படி அறிமுகமாவது விஜய் கனிஷ்கா தான். அந்த ராசி அவரை எப்படி அழைத்துக் கொண்டு செல்லப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !