உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எனக்கு பிடித்த இடம் : நயன்தாரா

எனக்கு பிடித்த இடம் : நயன்தாரா

தமிழில் டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. தற்போது மலையாளத்தில் நிவின் பாலி உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நயன்தாரா. அதிலும் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை பதிவிட்டு பார்வையாளர்களை பொறாமை கொள்ள செய்கிறார்.

இருதினங்களாக விக்னேஷ் சிவன் உடன் இணைந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளார் நயன்தாரா. இந்நிலையில் ரெசார்ட் ஒன்றில் கார்டன் பகுதியில் மரத்தடியில் விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் ரொமான்ஸ் போட்டோவை பகிர்ந்து, ‛எனக்கு மிகவும் பிடித்த இந்த இடத்திற்கு 5 ஆண்டுகளுக்கு பின் வந்துள்ளேன்' என பதிவிட்டுள்ளார் நயன்தாரா. ஆனால் இது எந்த இடம் என அவர் குறிப்பிடவில்லை. குறிப்பாக ஒரு போட்டோவில் நயன்தாரா காது அருகே வைத்துள்ள ஒற்றை பூ ரசிகர்களை கவர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !