உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மம்முட்டியை இயக்கும் கவுதம் மேனன்

மம்முட்டியை இயக்கும் கவுதம் மேனன்

தமிழ் சினிமாவில் மின்னலே என்ற படத்தை இயக்கி அறிமுகமான கவுதம் மேனன், அதையடுத்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், வெந்து தணிந்தது காடு என பல படங்களை இயக்கினார். கடைசியாக விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்தபடம் இன்னும் வெளியாகவில்லை.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், லியோ, ரத்னம் என பல படங்களில் நடித்தவர் தற்போது விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கும் ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் கவுதம். ஆக்ஷன் கலந்த ஸ்டைலீஷ் படமாக உருவாகும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !