ஆர்த்தி சுபாஷுக்கு திருமணமா?
ADDED : 522 days ago
பாண்டவர் இல்லம் தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ஆர்த்தி சுபாஷ். தற்போது விஜய் டிவியில் வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற தொடரில் நடித்து வருகிறார். ஆர்த்தி சுபாஷுக்கு ஏற்கனவே காதலர் இருக்கும் நிலையில், ஆர்த்தி சுபாஷ் வேறொரு நபருடன் ஹல்தி பங்ஷன் கொண்டாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைபார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அது நிஜத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியல்ல. ஆர்த்தி சுபாஷ் தற்போது நடித்து வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் வரும் ஒரு காட்சிக்காக தான் ஹல்தி பங்சன் செட்டப் போடப்பட்டுள்ளது.