ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா
ADDED : 518 days ago
தனுஷ் தனது 50வது படமாக 'ராயன்' என்கிற படத்தை இயக்கி, நடித்துள்ளார். அவருடன் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகின்ற ஜூன் 13ம் தேதி அன்று வெளியாகிறது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக வருகின்ற ஜூன் 1ம் தேதி அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.