உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மே. 24ல் வெளியாகும் பி.டி. சார்

மே. 24ல் வெளியாகும் பி.டி. சார்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பட இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி 'பி.டி.சார் என்கிற படத்தில் நடித்து, இசையமைத்துள்ளார். இதில் காஷ்மீரா பர்தேசி, அனிகா சுரேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படத்தை படப்பிடிப்பு நிறைவு பெற்றும் கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. வருகின்ற மே 16ந் தேதி இதன் டிரைலர் வெளியாகும் என அறிவித்ததை தொடர்ந்து இப்போது வருகின்ற மே 24ந் தேதி இப்படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !