உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ?

'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ?

தரணி இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் 2004ல் வெளிவந்த 'கில்லி' படம், ரீ-ரிலீஸாக கடந்த மாதம் வெளியானது. வெளியான நாளிலிருந்தே இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு கிடைத்தது.

அந்தக் காலத்தில் படம் வெளியான போது குழந்தையாக இருந்த விஜய் ரசிகர்கள் இப்போது படத்தை தியேட்டர்களில் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தார்கள். 25 நாட்களைக் கடந்தும் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் நல்ல வசூலையும் குவித்துள்ளது.

25 நாட்களில் மொத்தமாக 30 கோடி வசூலை அள்ளியுள்ளது. தமிழகத்தில் சுமார் 20 கோடி, மற்ற இடங்களில் 10 கோடி என 30 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதில் படத்தின் தயாரிப்பாளருக்கு சென்றதை விட தியேட்டர்காரர்களுக்கு சென்ற பங்குதான் அதிகம். சுமார் 70 சதவீதத் தொகை தியேட்டர்காரர்களுக்கு, 30 சதவீதத் தொகைதான் தயாரிப்பாளருக்கு என்கிறார்கள்.

எது எப்படியோ, டிவியில் பல முறை ஒளிபரப்பான ஒரு படம் ரீ-ரிலீஸில் இத்தனை நாட்கள் ஓடி, இவ்வளவு வசூலித்தது சாதனைதான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !