உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கூலி' டீமின் திடீர் பயணங்கள் : அபுதாபி பறந்தார் ரஜினி, சபரிமலை சென்றார் லோகேஷ்

'கூலி' டீமின் திடீர் பயணங்கள் : அபுதாபி பறந்தார் ரஜினி, சபரிமலை சென்றார் லோகேஷ்

ரஜினி தனது 170வது படமான 'வேட்டையன்' படப்பிடிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு முடித்தார். அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சில நாட்கள் அபுதாபியில் அவர் ஓய்வெடுக்க இருக்கிறார்.

இதற்காக நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து காலை 11 மணியளவில் எத்தியாட் விமானம் மூலம் அபுதாபி புறப்பட்டு சென்றார். விமான நிலையத்திற்கு எப்போதும் போல உற்சாகமாக வந்தார். கருப்பு பேண்டும், வெள்ளை டிசர்ட்டும் அணிந்து எளிமையாக வந்த அவர், சுற்றி இருந்தவர்களை பார்த்து புன்னகை செய்தபடி சென்றார். தனக்கு உதவ வந்த விமான நிலைய ஊழியரின் தோள்மீது கைபோட்டபடி சென்றார்.
இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் தனது நண்பர்களுடன் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !