உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே

சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே

தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக வாய்ப்புகள் அமையாமல் தெலுங்கிற்கு சென்று அங்கு முன்னணி நடிகையாக மாறினார். அதை தொடர்ந்து மீண்டும் தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தின் மூலம் உள்ளே நுழைந்தார். அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை அவருக்கு தர தவறியதால் தெலுங்கிலும் ஹிந்தியிலும் கவனம் செலுத்தி பிசியாக நடிக்க துவங்கினார் பூஜா ஹெக்டே.

இந்த நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்திலேயே பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிப்பார் என்று அப்போது பேசப்பட்டது. அந்த வாய்ப்பு தவறிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பாக சூர்யா படத்தை கைப்பற்றியுள்ள பூஜா ஹெக்டே இந்த படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ஒரு வலுவான ரீ என்ட்ரியை கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !