உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தி கோட்', விஜய்யின் விஎப்எக்ஸ் பணிகள் நிறைவு

'தி கோட்', விஜய்யின் விஎப்எக்ஸ் பணிகள் நிறைவு

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'. இப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் கடந்த வாரம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

அங்குள்ள பிரபல லோலா விஎப்எக்ஸ் நிறுவனத்தில் இப்படத்திற்கான விஎப்எக்ஸ் காட்சிகளுக்கான பிரத்யேக படப்பிடிப்பு நடைபெற்றது. அங்குள்ள ஸ்டுடியோவில் விஜய் நடிக்க காட்சிகள் படமாக்கப்பட்டது.

“லோலா-வில் விஜய் உடனான விஎப்எக்ஸ் காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிவடைந்தது. அவுட்புட்டுக்காகக் காத்திருக்க முடியவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார் வெங்கட்பிரபு. அத்துடன் அந்த பணிகள் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

டெக்னிக்கலாக இந்தப் படத்தை வேறு ஒரு தரத்தில் வெங்கட் பிரபு உருவாக்கி வருகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !