உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சலார் 2' - டிராப் ஆகிறதா, தள்ளிப் போகிறதா ?

'சலார் 2' - டிராப் ஆகிறதா, தள்ளிப் போகிறதா ?

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான தெலுங்குப் படம் 'சலார்'. இப்படம் பான் இந்தியா படமாக வெளிவந்தது.

சுமார் 300 கோடி செலவில் தயாரானதாக சொல்லப்பட்ட இந்தப் படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எதிர்பார்த்த அளவு வசூலில் பெரிய சாதனை எதையும் படைக்கவில்லை.

முதல் பாகம், 'சலார் 1 - சீஸ்பயர்' என வெளிவந்தது. அடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கி 2025ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். இந்தப் படத்தை முடித்த பிறகு ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை பிரசாந்த் நீல் இயக்கப் போவதாக இருந்தது.

இந்நிலையில் இன்று ஜுனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் இணையும் படம் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது என அறிவித்துள்ளார்கள். இதனால், 'சலார் 2' படம் டிராப் ஆகிறதா என டோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

'சலார் 2' படத்திற்கு அதிக முதலீடு செய்ய தயாரிப்பாளர் தயங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே, படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !